AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~ கவளங்கள் ~~ Sun May 20, 2012 5:50 pm | |
| கவளங்கள் ஒவ்வோரு கவளமும் என்னுள் இறங்கும் போது உன் நினைவு தான் அம்மா சிறு குழந்தைப் பருவத்தில் நிலாவைக் காட்டி எனக்கு கவளம் ஊட்டினாய் உள்ளங்கையில் கவளம் வைத்து அதன் நடுவில் குளம்பை ஊற்றி கதைகள் சொல்லி சாப்பிட வைத்தாய் நீ முதுமையில் பிணியாகக் கிடந்த போது ஒரு கவளம் சோற்றைக் கூட உண்ண முடியாமல் தவித்தாய் அந்த கவளம் தர முடியாமல் நான் வெந்தேன் நீ கொடுத்தவை கவளங்கள் அல்ல பாசத்தோடு நீ கொடுத்த கவசங்கள் | |
|