AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~ரகசிய காதலர்கள்~~ Thu Jun 21, 2012 2:06 am | |
| ரகசிய காதலர்கள் எத்தனை தாரம் உனக்கு
பன்னிரு மாதமும்
பன்னிரு திசையில்
இருக்கிறாய் (மழை )
எல்லா காதலியையும்
தொட்டுவிட்டு
ருசித்துவிட்டு
விட்டுவிட்டாய்
யாரை மனப்பாயோ (ஓவியம் தொடும் தூரிகை )
தலைவனின்
முத்த சுவடுகள்
இன்னும் காயவில்லை
தெருவில் ஊர்கோலமா (புல்லின் மீது பனித்துளி )
எத்தனை ஆடவன்
உன்னை தொடுகிறான்
வெட்க்கமே இல்லாமல்
விரிந்து கிடக்கிறாய் (அலை தொடும் கடற்கரை )
இரவு முழவதும் கூடல்
பகல் முழுவதும் ஊடலா (கண் இமை )
தலைகிழாய் தொங்குகிறாய்
தென்றல் காதலனோடு
கோபமா (மின்விசிறி ) | |
|