AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~அம்மா இங்கே வா~~ Sat Jun 23, 2012 12:20 pm | |
| அம்மா இங்கே வா..... அம்மா என்றழைக்கும் முன்னே.. அனுப்பிவிட்டாய் காப்பகத்துக்கு....... அன்பு காட்டுவதை பகுதிநேர பணி ஆகிவிட்டாய்... அனாதை போல் அங்குள்ளோம்..
அரவணைக்கக தான் யாரும் இல்லை.. காசு வாங்கும் கைகள் கண்ணீரை துடைக்குமா....??
கொஞ்சி பேச நீ வேண்டும்... மழலை மொழி கேட்க நீ வேண்டும்.. தாலாட்டு பாடிட நீ வேண்டும்.. முத்தமிட நீ வேண்டும்.. முழு நேரம் என்னோடு இருந்திடு. முழு நிலவு காட்டி சோறூட்டிடு...
பொம்மையும் புத்தாடையும் எனக்கு வேண்டாம்... நீ மட்டும் வேண்டும்.. நீ மட்டுமே வேண்டும்.... இயந்திர உலகில் நீயும்... இயந்திரமாகி தான் போனாயே அம்மா.......!! | |
|