RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inChaT
Latest topics
» The Girl Next Door
>>  Poda Podi Movie Review - போடா போடி விமர்சனம்<< Icon_minitimeSat Oct 26, 2013 3:00 pm by Anjali

» The Role Play
>>  Poda Podi Movie Review - போடா போடி விமர்சனம்<< Icon_minitimeFri Oct 25, 2013 2:37 pm by Lekha

» Yealae Yealae Dosthu Da Song Lyrics From Endrendrum Punnagai Movie
>>  Poda Podi Movie Review - போடா போடி விமர்சனம்<< Icon_minitimeThu Oct 24, 2013 3:20 pm by Selection

» Vaan Engum Nee Minna Song Lyrics From Endrendrum Punnagai Movie
>>  Poda Podi Movie Review - போடா போடி விமர்சனம்<< Icon_minitimeThu Oct 24, 2013 3:17 pm by Selection

» Othaiyila Ulagam Song Lyrics From Endrendrum Punnagai Movie
>>  Poda Podi Movie Review - போடா போடி விமர்சனம்<< Icon_minitimeThu Oct 24, 2013 3:11 pm by Selection

» Kadal Naan Thaan Song Lyrics From Endrendrum Punnagai Movie
>>  Poda Podi Movie Review - போடா போடி விமர்சனம்<< Icon_minitimeThu Oct 24, 2013 3:07 pm by Selection

» Ennai Saaithaale Song Lyrics From Endrendrum Punnagai Movie
>>  Poda Podi Movie Review - போடா போடி விமர்சனம்<< Icon_minitimeThu Oct 24, 2013 3:01 pm by Selection

» Oru Nodi Piriyavum Song Lyrics From Rummy Movie
>>  Poda Podi Movie Review - போடா போடி விமர்சனம்<< Icon_minitimeThu Oct 24, 2013 2:52 pm by Selection

» Kooda Mella Kooda Vachi Song Lyrics From Rummy Movie
>>  Poda Podi Movie Review - போடா போடி விமர்சனம்<< Icon_minitimeThu Oct 24, 2013 2:25 pm by Selection

March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
CalendarCalendar

 

 >> Poda Podi Movie Review - போடா போடி விமர்சனம்<<

Go down 
AuthorMessage
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

>>  Poda Podi Movie Review - போடா போடி விமர்சனம்<< Empty
PostSubject: >> Poda Podi Movie Review - போடா போடி விமர்சனம்<<   >>  Poda Podi Movie Review - போடா போடி விமர்சனம்<< Icon_minitimeWed Nov 14, 2012 10:03 pm



Poda Podi Movie Review - போடா போடி விமர்சனம்



>>  Poda Podi Movie Review - போடா போடி விமர்சனம்<< Poda-Podi




இந்திய மற்றும் தமிழ் பண்பாட்டில் ஊறிய இளைஞர்கள், யுவதிகள்... அதேபோல புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்து வளரும் இந்திய அல்லது தமிழ் இளைஞர்கள் யுவதிகள் இடையிலான கலாச்சார முரண்பாடுகளை அலச ஆரம்பித்த கதைகளை 90களிலேயே பாலிவுட் சினிமா தொட்டுப் பார்த்து விட்டது! தமிழ்சினிமாவிலும் ஒருசில அரைவெக்காட்டுப் படங்கள் வெளிவந்தன.

இளையதளபதி விஜய் – சிம்ரன் நடிப்பில் வெளிவந்த ‘ப்ரியமானவளே..!’ படம், டேட்டிங் படங்களின் முன்னோடியாக ஓராண்டு அக்ரிமெண்ட் வாழ்க்கையை பற்றிப் பேசியது! அதன்பிறகு செல்வராகவன் சித்தரித்துவரும் பெரும்பான்மையான இளம் கதாபாத்திரங்கள், சுதந்திரம் நிறைந்த மேற்கத்திய வாழ்வுமுறையின் செராக்ஸ் காப்பிகளாக இருந்தன. ஆனால் இவற்றில் இருந்து மாறுபட்டு அறிமுக இயக்குனர் விக்னேஷ் சிவன் மிகக் கொண்டாண்டாட்டமான ஒரு மேக்கிங் மூலம் மிகசீரியஸான பண்பாட்டுச் சிக்கலை சிம்பு –வரலட்சுமி காதல் வாழ்க்கை இந்தப் படத்தில் அலசியிருக்கிறார்!


இந்த அலசல்… ஆட்டமும், பாட்டமும், புன்னகையும் கண்ணீரும், தோல்வியும் ,வெற்றியும் , அடர்ந்த இருளும் அதிலிருந்து உயிர்பிடிக்கும் ஒரு துளி நம்பிக்கை வெளிச்சமும் என்று இளமைக் கொண்டாட்டமாக மொத்த படமும் ஜொலிப்பதில் இயக்குனர் கவணிக்க வைத்து விடுகிறார்.


போடா போடி படத்திம் முதல் ப்ளஸ் அதன் கிரிஸ்பியான நேரம்! ரொம்பவே விவாதிக்க வேண்டிய பிரச்சனையை வளவளவென்று இழுத்துக் கொண்டிருக்காமல் நறுகென்று முடித்து விடுவதில் ‘கோட்டாவி’ வருவதை தவிர்த்து விட்டிருக்கிறார்கள்! நீங்கள் கொட்டாவி விடும் முன்பு கதையை கொஞ்சம் ஊறுகாய் மாதிரி தொட்டுப் பார்த்து விடலாம்!


சென்னைவாழ் தமிழ் இளைஞரான சிம்பு அனிமேஷன் படித்து முடித்த கையோடு, வால்ட் டிஸ்ட்னியில் நிறுனவத்தில் சேர்ந்து பெரிய அனிமேட்டராக வரவேண்டும் என்ற லட்சியத்தோடு லண்டனில் செட்டில் ஆகிவிட்ட தனது சித்தப்பா விடிவி கணேஷ் வீட்டுக்குச் செல்கிறார். போனவர் இளைமையில் துடிப்பில் ஒரு தமிழ்ப் பெண்ணைக் காதலிக்க முடிவுசெய்கிறார்.

இந்தநேரத்தில் லண்டனின் பிறந்து வளர்ந்த வரலட்சுமி சிம்புவின் கண்களில் பட இருவரும் ஈர்க்கப்படுகிறார்கள். பிறகு காதலிக்கிறார்கள். வரலட்சுமி ஜோடியாக ஆடும் சல்சா வகை நடத்தில் உலக அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெல்வதை லட்சியமாகக் கொண்ட பெண்.

ஆனால் இவளைத் திருமணம் செய்து கொள்வதா வேண்டாமா என்பதில் சிம்புவுக்கு குழப்பம்! காரணம் வரலட்சுமி சொல்லும் சின்னச்சின்ன பொய்களும், அவர் சல்சா நடனப்பயிற்சியின் போது ஆண் பயிற்சியாளருடன் சேர்ந்து ஆடுவதும், லண்டன் வாழ்க்கை முறையில் நட்பின் நிமித்தம் யாரொவரையும் கட்டியனைக்கும்போதும், தங்கள் அன்பின் சின்னமாக, காதோரக் கன்னத்தில் மெல்லிய முத்தங்கள் பறிமாறிக்கொள்வது கைகுழுக்கிக் கொள்வதுபோல மரபார்ந்த பழக்கமாக இருப்பதையும், வரலட்சுமி இந்தப்பண்பாட்டில் ஊறியவர் என்பதால் அவரும் இவற்றை பின்பற்றுவதையும் சிம்புவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!


ஆனால் ஒரு கட்டத்தில் சட்டென்று திருமணம் செய்துக்கொள்ள இருவரும் முடிவெடுக்கிறார்கள். வரலட்சுமி நடனக்கலைஞராக இருப்பதன் மூலம் கட்டற்ற வாழ்க்கைமுறை வாழ்வதாக நினைக்கும் சிம்பு, மனைவியாக்கிக் விட்டால்… அம்மா என்கிற கமிட்மெண்டுக்குள் அடக்கிவைத்து தனக்கானவளாக மட்டும், அவளது வட்டத்தை சுருக்கி விடலாம் என்று நினைக்கிறார்.

இதனால் திருமணம் ஒரு கமிட்மெண்ட் என்று சிம்பு ஒரு குண்டை தூக்கிப்போட, வரலட்சுமியோ தனது சுதந்திரத்தை சிம்பு காவு கேட்கிறான் என்று பயந்து சிம்புவை விட்டு விலகுறார். அந்த பிரிவே அவர்களை திருமணத்தில் ஒன்று சேர்க்கிறது! ஒரு குழந்தையும் பிறக்கிறது. குழந்தை பிறந்த பிறகு, தனது நடன லட்சியத்துக்காக வரலட்சுமி தன்னை தயார்செய்யப் போவதாகச் சொல்ல சிம்புவுக்கோ அதில் விருப்பமில்லை! குழந்தை, குடும்பம், கமிட்மெண்ட் வாழ்க்கையை விட, நடனப்போட்டி சந்தோஷம் தரபோவதில்லை என்று சிம்பு எடுத்துச்சொல்ல கொதித்தெழும் வரலட்சுமி எடுக்கும் முடிவுகளும், அதனால் சிம்பு வரலட்சுமி இடையிலான இழப்புகளும், தவிப்புகளும், அவர்களது வாழ்க்கையை முடக்கிப் போடுகிறது! இதிலிருந்து உண்மையான அன்பு அவர்களை எப்படி மீட்டுவருகிறது என்பதுதான் போடா போடியின் இளமை துள்ளும் துறுதுறு திரைக்கதை


மாறுபட்ட பண்பாடுகளில் வளர்ந்த இரண்டுபேர் வாழ்க்கையில் இணைந்தாலும் அவர்கள் இடையிலான காதல், அது உறவாகும்போது பாசமாக , ரத்தபந்தமாக புதிய பரிமாணம் பெறும்போது கிடைக்கும் பேரன்பு ஆகிய கலப்படமற்ற அடிப்படை மனித உணர்ச்சிகள், ஒட்டுமொத்த மனிதசமுகத்துக்கும் பொதுவானவைதான் என்பதை இந்த படத்தின் மூலம் கன்வே செய்வதில் வெற்றிபெற்றிருக்கிறார் இயக்குனர்.


பாண்பாட்டு முரண்கள், காதல், திருமணம், குடும்பவாழ்க்கை என்று சீரியஸான கதையை எடுத்துக் கொண்டாலும் சிக்கல் இல்லாமல் அவற்றை அலசுவதற்கு அழகான, செறிவான பல காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய பலகாட்சிகள் இருந்தாலும், எதிர்பாராத தருணத்தில் குழந்தையை பறிகொடுத்துவிட்டு பிரிந்துவிடும் வரலெட்சுமியை அவளது கார்டியன் விட்டுக்குச் சென்று திரும்பவும் சேர்ந்து வாழலாம் என்று அழைக்கும் காட்சியும், அந்தக் காட்சியில் வாழ்க்கை இன்னும் முடிந்துபோய் விடவில்லை என்பதைச் சொல்லும் விதத்திலும் திரையரங்கில் அப்பளாஸ்களை அள்ளுகிறார்.


ஒரு இளம் காதலானாக ஸ்கோர் செய்ய சிம்புவுக்குச் சொல்லித் தரவேண்டியதில்லை என்றாலும், ஒரு இளம் அப்பாவாக சிம்புவின் நடிப்பு செம துடிப்பு! ஒரு தமிழ் அப்பாவுக்கான வாழ்க்கை மீதான பிடிப்பு அது! அதேபோல பெரும்பாண்மை ஐரோப்பிய நாடுகளில், மனைவியின் பிரசவத்தின்போது கணவன் அருகிலேயே இருக்கவேண்டும் என்ற வழக்கத்தின் காரணமாக வலியால்திடிக்கு வரலட்சுமியின் அருகில் இருந்து, சிம்பு அழும் காட்சி, அவஸ்தையான அழகு!


ஐரோப்பிய வாழ்க்கை முறையின் சில பழக்க வழக்கங்களை ஏற்கமுடியாத சிம்பு, திருமணத்துக்கு முன் ப்ரிமேரிட்டல் உறவு வைத்துக்கொள்ள வரலட்சுமையை அழைப்பது மட்டும் தமிழ் பண்பாட்டின் மனநிலையா எனபது படத்தின் அடிப்படையான டேக் லைனுக்கு ஆப்பு வைக்கும் காட்சி!


ஆனால் நடிப்பிலும் டயலாக் டெலிவரியிலும் சிம்புவை தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார் வரலட்சுமி! லண்டனில் பிறந்து வளர்ந்த வரலட்சுமி, திடீரென்று வாழ்க்கையில் நுழைந்த ஒருவன் தனது பழக்க வழங்களின் மதிப்பீடுகளை கூறை கூறுவதையும் உள்ளர்த்தம் கற்பிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தனது சிறகுகள் ஒடிக்கப்படுவதாக நினைத்து ஓடுவதும், பிறகு காதலின்பால் ஒடுங்கி, சிம்புவை தேடிவருவதும், தயானபிறகு தனது லட்சியத்துக்கும் குடும்பத்துக்குமான இழுபறியில் அல்லாடுவதையும் அற்புதமாக வெளிபடுத்தியிருக்கிறார். தாமொரு தேர்ந்த நடனக்கலைஞர் என்பதையும் நீருபனம் செய்து விடுகிறார்.


சோபனா, விடிவி கனேஷ் ஆகிய இரண்டுபேருக்கும் அதிக வேலை இல்லாவிட்டாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.


படத்தின் இறுதி எபிசோட்டில் சல்சா நடனத்துக்குப் பதிலாக குத்தாட்டத்தை புகுத்தியதில் இயக்குனருக்கு சின்ன சறுக்கல்! மற்றபடி சிம்பு –வரலட்சுமி காதல் வாழ்க்கையை தனித் தனி எபிசோட்களாக, க்யூட்டான தலைப்புகளில் விவரித்துச் சென்ற விதம் நேர்த்தி!


போடா போடியில் மேலும் இரண்டுபேர் தங்களது அபாராமான பங்களிப்பை தந்திருகிறார்கள் அவர்களில் முதலிடம் இசையமைப்பாளர் தரண்குமாருக்கு! மேற்கத்திய சாயல் கொண்ட டுயூன்கள் என்றாலும், வரிகளை சிதைக்கவில்லை இசை! ஒலிகளை கையாண்ட விதத்திலும் அதிக இரைச்சல் இல்லாத இசையை வழங்கியிருகிறார். இரண்டாவதாக படத்தின் ஒளிப்பதிவாளர் டங்கன் டெல்ஃபோர்ட். லண்டனை ஹாலிவுட் படங்களில் கூட இத்தனை அழகாக காட்டினார்களா தெரியவில்லை. கலை இயக்கமும் இதுவொரு கலர்ஃபுல் படம் என்பதற்காக வேலை செய்திருகிறது…!!


ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் போடா போடி ஒரு கல்சுரல் பெப்பர்மெண்ட்....!!




Back to top Go down
 
>> Poda Podi Movie Review - போடா போடி விமர்சனம்<<
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Poda Podi Song Lyrics - Podaa Podi Movie
» >> Thupakki Movie Review - துப்பாக்கி - சினிமா விமர்சனம்<<
» 10 Movie Stars in Their Early Years
» I am A Kuthu Dancer Song Lyrics - Podaa Podi Movie
» Appan Mavanae Vaada Song Lyrics - Podaa Podi Movie

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: CINE GOSSIPS-
Jump to: