Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: தலைவலியை போக்க சில தகவல்கள் Tue Jul 09, 2013 1:26 am | |
| . தலைவலியை போக்க சில தகவல்கள் * சில விட்டமின்கள், உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல், மூளை நரம்புகளை முடுக்கி, முழு அளவில் இயங்கச் செய்கின்றன. அதனால், விட்டமின் சத்துகள் தரும் பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்ற உணவு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிலும், பி 12 போன்ற விட்டமின்கள் அதிக பலன் தரும்.
*விட்டமின்கள் போல, கனிம சத்துக்கள் மிக முக்கியம். அதுவும், தலைவலி போன்ற வலிகள் வராமல் தடுக்கின்றன.
* தலைவலிக்கு முக்கிய காரணம், சோர்வு தான். போதுமான தூக்கமின்மையால் சோர்வு ஏற்படுகிறது. குறைந்தபட்சம் ஒருவருக்கு நாள் தோறும் ஏழு மணி நேர தூக்கம் தேவை. அது கிடைத்து விட்டால், தலைவலி வரவே வராது.
* மீன் உணவு சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களை கேட்டுப் பாருங்கள், "தலைவலியா... அப்படீன்னா?' என்று கேட்பர். ஆம், மீன் உணவில் உள்ள, "ஒமேகா 3' எண்ணெய், உடலின் சுகாதாரத்துக்கு பல அரிய பலன்களைத் தருகிறது.
* செயற்கை இனிப்புகள் சேர்ந்த உணவுப் பண்டங்களைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அப்படி செய்தாலே, தலைவலி வராது. செயற்கை இனிப்புகள், இரத்த நாளங்களை விரிவடையச் செய்து விடுகிறது. அதனால், தலைவலி வருகிறது.
* அக்குபஞ்சர் சிகிச்சை முறை, எந்தப் பாதிப்பும் இல்லாதது. லேசாக எறும்பு கடிப்பது போல தான் இருக்கும். தலைவலி இருக்கும் இடமே தெரியாது.
* யோகா பயிற்சி செய்து வந்தால், "மைக்ரேன்' தலைவலி கூட விழுந்தடித்துக் கொண்டு ஓடி விடும்.
* கடும் வேலை இருந்தாலும், அதை செய்துவிட்டு, சில நிமிடங்கள் கால் ஆற திறந்த வெளியில் நடக்கவும். ஏ.சி.,யை விட்டு வெளியில் வந்து இயற்கை காற்றை சுவாசியுங்கள். தலைவலி வந்த வழியே சென்று விடும்.
இப்போது புரிகிறதா... இனி மாத்திரை போடாதீர்கள், இந்த வழிகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றுங்கள், தலைவலி, அடுத்த சில மாதங்கள் நிரந்தரமாக போயே போய் விடும். | |
|