Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: சொல்லாத சொல்லுக்கு விலை இல்லை பாரு Thu Jul 18, 2013 2:08 pm | |
| . சொல்லாத சொல்லுக்கு விலை இல்லை பாரு சந்தங்கள் கொண்டு சங்கீதம் பாடு சந்தோசம் கொண்டு சஞ்சலங்கள் வெல்லு
தாம் என்றும் தூம் என்றும் குதியாதே நில்லு தானாக எல்லாம் சரியாகும் பாரு
மேல் என்றும் கீழ் என்றும் சக்கரத்தில் உண்டு மேல் உள்ளது கீழ் வருவது சக்கரத்தின் இயல்பு
லப் என்றும் டப் என்றும் இதயம் துடிக்குது பாரு லஞ்சம் கொடுத்து கொஞ்சம் நீடித்து பாரு
வாழ்வென்றால் சாவொன்று எப்போதும் உண்டு வாழும் போது நன்றாக வாழ்ந்துதான் பாரு
பால் என்றும் கள் என்றும் ஓரே நிறத்தில் உண்டு பார்க்கும் பார்வையில் தான் வேறுபடும் பாரு
சொல் என்றும் செயல் என்றும் இருசொல் உண்டு சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பாய் இரு
சொல் உண்டு என்று சொல்லாதே நில்லு சொல்லாத சொல்லுக்கு விலை இல்லை பாரு
செய்வது சரியென்று நினையாதே நில்லு செய்வதுள் பிழை உண்டு யோசித்துதான் பாரு
நீ என்றும் நாம் என்றும் சொல்லாதே கேளு நாம் என்று எப்போதும் சொல்லித்தான் பாரு நாளாக நாளாக நாடாகும் பாரு
| |
|