Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: எது வரை …………… Sat Jul 27, 2013 2:07 pm | |
| . எது வரை …………… பனித்துளி வாழ்க்கை பகலவன் வரும் வரை
பகையின் வாழ்க்கை சிநேகம் வரும் வரை
சிக்கலின் வாழ்க்கை தீர்வு வரும் வரை
கோடையின் வாழ்க்கை மழை வரும் வரை
ஊடலின் வாழ்க்கை கூடல் வரும் வரை
தபாலின் வாழ்க்கை கையில் வரும் வரை
பஞ்சின் வாழ்க்கை நெருப்பு அணுகா வரை
ஊரின் வாழ்க்கை மக்கள் உள்ள வரை
காதலின் வாழ்க்கை கலியாணம் ஆகும் வரை
தாகத்தின் வாழ்க்கை தண்ணிர் கிடைக்கும் வரை
தவறின் வாழ்க்கை திருந்தும் வரை
தஞ்சையின் வாழ்க்கை கோயில் உள்ள வரை
பாசத்தின் வாழ்க்கை பணம் கேட்கும் வரை
பொய்யின் வாழ்க்கை உண்மை தெரியும் வரை
துன்பத்தின் வாழ்க்கை தூ என்று நினைக்கும் வரை
நட்பின் வாழ்க்கை நல்லதை நினைக்கும் வரை
சொல்லின் வாழ்க்கை செயலில் இருக்கும் வரை
இரகசியத்தின் வாழ்க்கை இருவருக்குள் இருக்கும் வரை
உனது வாழ்க்கை உன் கையில் இருக்கும் வரை | |
|