RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
September 2018
MonTueWedThuFriSatSun
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
CalendarCalendar

Share | 
 

 உன் தாய் நான் தானே.....

Go down 
AuthorMessage
Jaya

avatar

Posts : 150
Join date : 2013-07-08

PostSubject: உன் தாய் நான் தானே.....   Mon Jul 29, 2013 3:19 pm

.



உன் தாய் நான் தானே.....




கட்டி தங்கமே கரும்பே என்று என் கரங்களால் தூக்கி மகிழ்ந்து

வெட்டி விறகு எடுத்து வெய்யிலிலே வயல் செய்து

வேளாவேளைக்கு சோறு தந்து - நான்

தைக்க இடமில்லா சேலையை உடுத்து

தங்கமே உனை ராஜா போல் வளர்த்தேனடா



வளா்ந்து விட்ட உன்னை கண்டு

வசந்தமே வாசல் வந்தது என்று மகிழ்ந்தேனடா – மனதால்

தொட்டு விட்டேன் இவளை என்றாய்

தொடர்ந்தால் இவளுடன் வாழ்க்கை என்றாய்

பட்டுவிட்ட என்னை மறந்து

பருவக்கதிர் உனை நினைந்து - நீ

தொட்டுவிட்ட சிறுக்கியையே உனக்கு

தொடுத்து வைத்தேன் தாரமாக



இத்தனை செய்தேன் என்று சொல்லவில்லை - நீ ஏன்

இப்படிச் செய்தாய் என் மகனே

கட்டியவா் மறைந்த போதும் கண்ணே நான் கலங்கவில்லை

தங்கமகன் நீ எனக்கு தரணியில் உள்ளாய் என்றிருந்தேன்



இன்றோ

கட்டிய சேலையுடன் கலைத்துவிட்டாய் வீதியிலே

கையேந்தி திரிகின்றேன் கண்ணே உன் கண்முன்னே

இத்தனை நீ செய்தும் எனக்கு கோபம் இல்லையடா

இறைவா நான் கேட்பதெல்லாம் என்னுயிரை எடுத்துவிடு

எடுத்துவிட்ட எனக்காக மகன் கையில் மழலை கொடுத்துவிடு

என்னதான் செய்தாலும்

என் மகன் நீ தானே

உன் தாய் நான் தானே.....





Back to top Go down
View user profile
 
உன் தாய் நான் தானே.....
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: