RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
July 2019
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
CalendarCalendar

Share
 

 வீதியில் நிற்பது ஏன்?

Go down 
AuthorMessage
Jaya

Jaya

Posts : 150
Join date : 2013-07-08

வீதியில் நிற்பது ஏன்? Empty
PostSubject: வீதியில் நிற்பது ஏன்?   வீதியில் நிற்பது ஏன்? Icon_minitimeThu Aug 29, 2013 12:57 am

.



வீதியில் நிற்பது ஏன்?





அப்பன் பட்ட கடனுக்கு

அடுக்களை மட்டும் தெரிந்த

நான்

அவசரமாய் மாலை வாங்கி

மணம் என்னும் பெயரால் விலையானேன்



மங்கைக்கு மதிப்பில்லை மணந்தவனிடம்

பாயும் நானும் ஓன்றானோம் அவ்வீட்டில்

மோகமது தீர்ந்தது முந்தானை வாசம் முடிந்தது

வயிற்றினில் இவள் தங்க

இருந்த சுவடின்றி மறைந்தான்

அவன்



இத்தனைக்கும் திருமணம்

இறை முன்னிலையில் நடந்தது

இறைவன் உள்ளனா என்ன ?

இவ்வளவையும் பார்த்துக்கொண்டு



விதையான இவள் வீருட்சமாக முளைக்க

முகம் பார்த்து ஓர் கதை

முகம் மறைய ஓர் கதை

இது தானோ உலகம்

என்னையே நான் கேட்டேன்



இத்தனை பிரச்சனையோடு

இவளும் ஓர் பிரச்சனையாக

இவ்வுலகிற்கு இவள் வந்தாள்

வந்த இவள் என்னைபோல் ஒருத்தி



என் வாழ்வு போல் ஓர் வாழ்வு

இவளுக்கும் வேண்டுமா ?

கொன்றுவிட நினைத்தேன்

கொல்லவும் துணிந்தேன்



இவள்

பிஞ்சு முகத்தை பார்த்ததும்

பெற்ற என் வயிறு

என் பிள்ளை என் பிள்ளை

என்கின்றதே என் செய்வேன்

இறைவா ?



ம்

இனியும்

உன்னையா நம்புவேன்

நான்


என் கையில் பலமிருக்க
என் உறவு இவள் இருக்க

எனக்கென்று உலகமைத்தேன்



அதில் நான்

இவள்

என் உழைப்பு

இது தான்

என் உலகம்



இவ் உலகினுள்

யாரும் வருவதுமில்லை

வர விடுவதுமில்லை




கடலவி

என் மகள்

ஆமாம்

என் வாழ்வின் கடல் போன்ற

துயரத்தை ஆவியாக்கியவள்

அவள்தானே



நானும்

என் கடலவியும்

வீதியில் நிற்பது

வாழ விதியற்றோ

வறுமையினால் கையேந்தியோ அல்ல

பக்கத்து ஊருக்கு

வேலைக்கு செல்ல..



கொஞ்சம் பொறுங்கோ

ஒன்று சொல்ல மறந்திட்டன்



தெரியுமா உங்களுக்கு

நான்கு வயது முடிய

கடலவியை

பாலர் வகுப்பில் சேர்க்கப்போகின்றேன்

ரீச்சரம்மாட்ட கேட்டாச்சு

என்ன நீங்க எவ்வளவு சந்தோசமான விசயம்

சொல்லியிருக்கின்றேன்

கொஞ்சம் சிரிச்சா தான் என்ன?







Back to top Go down
View user profile
 
வீதியில் நிற்பது ஏன்?
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: