AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~ எல்லாம் நேரம்தான்~~ Sat Aug 25, 2012 12:13 am | |
| எல்லாம் நேரம்தான் நொடி முள்ளே மூச்சாய்
வினாடி முள்ளே சிந்தனையாய்
நேரம் காட்டும் முள்ளே செயலுமாய்
பன்னிரண்டு எண்களும் பன்னிரண்டு மாதமுமாய்
எங்களின் வாழக்கையை நடத்துகிறாய்
நேரம் சொல்லும் கடிகாரமே.
உன்னை ஓட வைக்க..
மின்கல அடுக்கும், சாவியும்,
மின்சாரமும் உதவுவதைப் போல
எங்களை ஓட வைக்க
அன்பான, ஊக்கமான, திடமான
வார்த்தைகளே போதும்.
மூச்சு, சிந்தனை, செயல்
ஒன்றாக இருந்தால்
உன்னை போல்
பம்பரமாக நாங்களும்
சீராக ஓடலாம்தானே | |
|