Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: எனக்கு வேறு என்னடா வேணும் Wed Sep 18, 2013 8:02 pm | |
| . எனக்கு வேறு என்னடா வேணும் ஆயிரம் ஆயிரம் முத்தங்கள்
அம்மா !
அன்புடன் நான் தருகின்றேன்
உனக்கு
ஆயிரம் ஆயிரம் புஸ்பங்கள்
அம்மா
உன் அழகு நிகராகுமா ?
குடும்பம் ஜனநாயகத்தில்
குலதெய்வம் நீதானே ஜனாதிபதி
எண்ணற்ற அதிகாரம் உன்கையில்
எண்ணுவதே இல்லை அதை நீ
அன்பென்னும் மயிலிறகால் எமை
ஆசையோடு வருடுவாய் நீ
வக்கற்ற அமைச்சர்கள் நாம்
வந்து எதை கேட்டாலும்
வாரி வழங்கும் வள்ளல் நீ
என்ன வேண்டும் உனக்கென்றால்
எல்லாம் இருக்கென்பாய்
அம்மா !
உன் ஆசை எது என்று
உள்மனசை தொட்டு சொல்லு
கட்டாயம் சொல்ல வேண்டும் அல்லது
கதைக்கமாட்டேன் நான் என்றால்
சிரித்துகொண்டு அருகில் வருவாய் என்
சிரசினை கையால் வருடுவாய்
எனக்கென்ன வேண்டும் என்றா கேட்டாய்
என் பிள்ளை நீ
சிறப்பாய் வாழ வேண்டும்
என்னம்மா நீ என்றால்
சிரித்தபடி
எனக்கு வேறு என்னடா வேணும்
கண்ணா என்பாய் | |
|