AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~ஐம் பூதங்களின் அம்சம் நம்மிடம்~~ Tue Apr 17, 2012 3:29 am | |
| ஐம் பூதங்களின் அம்சம் நம்மிடம் ஐம் பூதங்களின் அம்சம் நம்மிடம்
நெருப்பின் அம்சம் கோபம்
நீரின் அம்சம் கண்ணீர்
வாயுவின் அம்சம் மூச்சுக்காற்று
பூமியின் அம்சம் பொறுமை
ஆகாயத்தின் அம்சம் பரந்து விரிந்த மனது
ஆனால் நாமோ
இதனை உபயோகிப்பதோ
கோபத்தை வெறுப்பாகவும்
கண்ணீரை நீலிக் கண்ணீராகவும்
மூச்சுக் காற்றை (பொறாமையினால் விடும்) பெருமூச்சாகவும்
பொறுமையா என்ன விலை என்றும்
பரந்து விரிந்த மனமா எங்கே என்றும்
இருப்பதை பார்த்தால்...
எங்கே நாம் செல்கிறோம்?
இயற்கை நமக்கு கொடுத்த வளத்தை
நாசம் செய்கிறோம்
எப்பொழுது நாம் விழித்து எழுவோம்?
இயற்கையுடன் இயைந்து வாழ?
| |
|