Posts : 661 Join date : 2012-01-26 Location : ~~WonDerLanD~~
Subject: ~~அடை மழை! ~~ Wed Apr 18, 2012 1:00 am
அடை மழை!
கண்ணடிக்கும் மின்னல்கள் எழுதி அனுப்பும் காதல் கடிதங்களாய் வந்து விழுந்தன மழைத்துளிகள்... அவற்றை காதலை வெறுக்கும் தந்தையாய் மாறி தடுத்தன குடைகள்! மேகத்திற்குள் நிலவு குடைக்குள் அவள் வெறுத்துப்போன மேகங்கள் விடாது அழுதன அடை மழை!