Posts : 661 Join date : 2012-01-26 Location : ~~WonDerLanD~~
Subject: ~~Aha அன்பு ~~ Fri Apr 20, 2012 6:35 pm
அன்பு = 100
அ உயிரெழுத்தின் முதல் எழுத்தே - நீ எண்ணிக்கையில் 1 ன் மெய்யெழுத்தின் இறுதி எழுத்தே - நீ எண்ணிக்கையில் 18 பு என்ற உயிர்மைஎழுத்தே உன் எண் வரிசை 81 - கண்டீரா அன்பு என்ற தமிழ் சொல்லின் கூட்டுத்தொகை 100 என்று அன்பென்றால் நூறு நூறென்றால் முழுமை முழுமை என்றால் நிறைவு அன்பு வழிச் சென்றால் முழுநிறைவுன்ற மகிழ்ச்சியும் அதன் வழி வரும் அமைதியும் நூற்றுக்கு நூறு - நம் வாழ்வில் சாத்தியமே - இதுவே சான்றோரின் சரித்திரமே