Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: விண்ணளவு காதல்.... Wed Jul 10, 2013 12:55 am | |
| . விண்ணளவு காதல்.... கரத்தோடு
கரம் பற்றி
காலமெல்லாம்
நாம் வாழ வேண்டும்
கண்ணோடு
காதல் பற்றி
கவிதையாய்
நான் கோர்க்க வேண்டும்
மௌனமென்பதும்
ஒரு மொழியாக
நம் ராஜ்சியத்தில்
நிலவ வேண்டும்
கோபமென்பது
வளர்ந்தாலும்
நம் காதல் கொள்கையிலது
மறைய வேண்டும்
விரல்கள் வழி
விரகங்கள் நெளிகையில்
விண்ணளவு காதல்
மனதுள் வளரவேண்டும்
இதழ்கள் வழி
இனிமை நுகர்கையில்
காதல் இசையாய் நாம்
என்றும் இனிக்க வேண்டும்
நகம் தன்னில்
நான் கிறுக்கையில்
நாலும் வந்து எனை
வீழ்த்த வேண்டும்
வாழ்வு தன்னில்
நாம்
வைக்கும் அடிகளில்
காதல்
வானம் நோக்கி
வளர்ந்து கொண்டே...
செல்ல வேண்டும் | |
|