Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: தழிழும் என்றும் வாழுமோ.... Fri Aug 09, 2013 2:25 pm | |
| . தழிழும் என்றும் வாழுமோ.... அலங்கார கந்தன் இவன்
ஆனந்த உலா காணும் நேரமோ
அழகன் இவன் முகம் காண
ஆயிரம் கண் வேணுமோ
தேவன் இவன் அருள் நாடி
தேடி வரும் கூட்டம் கொஞ்சமோ
தேரில் இவன் ஆடி வந்தால் - எம்
தேவையெல்லாம் பூர்த்தியோ
பச்சை வர்ணம் கலந்து வரின்
பார்க்கும் கண்கள் ஆயுள் நிளுமோ
பாரில் உள்ள அழகெல்லாம்
பார் வேந்தன் இவன் காலடியோ
தங்கம் இவன் அழகு காண
தமிழர் நாம் போவோமோ
தமிழ் கடவுள் இவன் இருப்பதனால்
தழிழும் என்றும் வாழுமோ | |
|