Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: உலகிற்கு எடுத்து சொல்லுங்கள்... Fri Aug 16, 2013 1:52 pm | |
| . உலகிற்கு எடுத்து சொல்லுங்கள்... பூத்திருக்கும் பூக்களே
கொஞ்சம் காத்திருங்கள்
பூமகள் வரும் பாதையில்
கொஞ்சம் பூக்கள் உதிருங்கள்
பா இசைக்கும் கூயில்களே
ஓடிவாருங்கள்
பாவை இவள் பேச்சினிலே
சங்கீதம் பழகுங்கள்
மோதி வரும் தென்றலே
கொஞ்சம் நில்லுங்கள்
மோகினி இவள் சுகந்தத்தை
சுமந்து செல்லுங்கள்
பாய்ந்து வரும் நதிகளே
கொஞ்சம் கேளுங்கள்
பாவை இவளிடம் வளைவு நெளிவுகளை
படித்து செல்லுங்கள்
ஓடிச்செல்லும் முகில்களே
கொஞ்சம் வாருங்கள்
ஒவியம் இவள் அழகினை
உலகிற்கு எடுத்து சொல்லுங்கள் | |
|