Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: வாழ்க்கை என்பது ஓரு.... Sat Aug 17, 2013 1:39 pm | |
| . வாழ்க்கை என்பது ஓரு.... வாழ்க்கை என்பது
ஓரு யாகம்
அதில்
ஆகுதியாகும் நம் காலம்
காலங்கள் கடந்தால் வரும் ஞானம்
வாழ்க்கை என்பது
ஓரு இருட்டு
அதில்
பாதம் வைத்த பின்பே
வெளிச்சம் வரும்
பின்பு தான் தெரியும்
என்ன இடம் என்று
வாழ்க்கை என்பது
ஓரு கடல்
அதில்
வாழ்வதென்பது ஒர் பயணம்
வல்லமைக் ஏற்ப கடக்கலாம்
படகிலோ... நீந்தியோ..
வாழ்க்கை என்பது
ஓரு சங்கீதம்
அதில்
பூபாளமும் நீ இசைக்கலாம்
முகாரியும் நீ இசைக்கலாம்
எல்லாம் உன்னிடம் தான் உள்ளது
வாழ்க்கை என்பது
ஓரு அடர்ந்த காடு
அதில்
ஓர் பாதை கண்டுபிடிப்பதே பெரும்பாடு
சிலர் பாதை பூக்களால் நிரம்பியிருக்கும்
சிலர் பாதை முட்களால் நிரம்பியிருக்கும்
என்றாலும் இரண்டும் இருந்தால் தான்
பாதை சுவாரசியமாக இருக்கும்
வாழ்க்கை என்பது
ஓரு புத்தகம்
அதன்
ஒவ்வொரு பக்கமாக
ஒவ்வொரு எழுத்தாக
சுவைத்து படி
படித்து முடித்தாலும் பொருள் புரியாத
புத்தகங்களும் உண்டு
வாழ்க்கை என்பது
ஓரு தேடல்
அதனை
தேடிக் கண்டுபிடி..... | |
|