Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: நானும் தேடுகின்றேன் Fri Aug 23, 2013 10:32 pm | |
| . நானும் தேடுகின்றேன் காலையானதும்
மனிதனின் தேடல்
பணம் தேடி கொஞ்சம்
பதவி ஆசையில் கொஞ்சம்
உறவு தேடி கொஞ்சம்
உலகை சுத்த கொஞ்சம்
நானும் தேடுகின்றேன்
நாறுகின்ற இடத்தில் இருந்து
நல்ல இரும்போ கடதாசியோ
கிடைத்துவிட்டால்
கஞ்சியுடன் இருக்கும்
நாலு வயிற்றுக்கு
நல்ல சோற்றுடன்
கறியும் ஓன்று ஆக்கி
விருந்தாய் தந்திடுவாள்
அம்மா.... | |
|