Subject: ~~ அம்மா என்றால் அன்பு ~~ Mon May 14, 2012 12:45 pm
அம்மா என்றால் அன்பு
அம்மா என்றால் அன்பு தான் முதலில் நினைவுக்கு வரும். ஈன்ற பொழுதிலும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய். என்ற முது மொழியை நீங்கள் சின்ன வயதில் கேட்டு இருப்பீர்கள்.
தாயின் அன்புக்கு நிகராக இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது.
சர்வதேச அன்னையர் தினம் களை கட்டி உள்ள சூழலில் தாய்மையின் மேன்மையை காட்டுகின்ற வகையில் வெளிவந்து இருக்கின்ற நிஜ வீடியோ ஒன்று இணைய உலகத்தை ஒரு கலக்கு கலக்கி வருகின்றது.
பிறப்பிலேயே விகாரமான தோற்றம் உடையவரும், குருடருமான குழந்தையை தாய் ஒருவர் உயிரினும் மேலாக நேசிக்கின்றமையை இவ்வீடியோ காட்டுகின்றது.
மகன் மீது வைத்திருக்கின்ற அன்பை வெளிப்படுத்துகின்றமைக்காக தாய்தான் இவ்வீடியோவை இணையங்களில் பதிவேற்றி உள்ளார். உங்கள் பார்வைக்கு இதை தருகின்றோம்.